மீண்டும் வருகின்றது இந்திய இறக்குமதி?

இலங்கை அரசு இறக்குமதிக்கான இறுக்கத்தை கடைப்பிடிக்க இந்தியாவிலிருந்து பொருட்கள் கடல்வழியாக கடத்தப்படுவது முனைப்படைந்துள்ளது.

ஏற்கனவே அண்மையில் பூநகரியில் ஒரு தொகை மஞ்சள் அகப்பட்டிருந்த நிலையில்  

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டபெரு சுமார் 1300 கிலோ மஞ்சள் பாசையூர் பகுதியில் வைத்து பொலிஸாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளது.  

இந்தியாவில் இருந்து பாசையூர் பகுதிக்கு படகில் மஞ்சள் கடத்தி வரப்படுவதாக யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

 

மீட்கப்பட்ட மஞ்சளை சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனராம்.


No comments