அமைச்சர் லொஹான் ரத்வத்த வீட்டிற்காம்? ராஜாங்க அமைச்சர்  லொஹான் ரத்வத்த பதவியில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் முறைகேடானமுறையில் நடந்துகொண்ட இலங்கை ராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவி விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளாராம்.

மேலும் அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கை குறித்து விசாரணைகள் முடியும் வரை ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளாராம்..

இந்நிலையில் லொஹான் ரத்வத்த ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.No comments