ஜநா அலுவலகமும் கண்டித்தது!
கைதிகளை தவறாக நடத்துவது கண்டிக்கத்தக்கது. என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மண்டேலா விதிகளின்படி, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று இலங்கையில் உள்ள ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி கூறினார்.
சிறைச்சாலை சீர்திருத்தம் மற்றும் போதை மறுவாழ்வு தொடர்பான எங்கள் பணிகளில், சிறையில் உள்ள அனைவரின் உரிமைகளையும் நிலைநாட்டும் திறனை வலுப்படுத்த ஐ.நா., இலங்கை செயல்படுகிறது மற்றும் கைதிகளை தவறாக நடத்துவதை கண்டிக்கிறது, ”என்று ஹனா சிங்கர்-ஹம்டி டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த , தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்வதாக மிரட்டியதாக குற்றச்சாட்டுக்கு மத்தியில் அவரது இவ்வாறு தனது டுவிட்டில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த செப்டம்பர் 12 ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று இரண்டு கைதிகளை மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
Post a Comment