இலங்கை:திறக்காமல் திறக்க யோசனை!




இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடுத்த வாரம் நாடு திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இதுதொடர்பில் நாளை (17) இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், கொவிட்-19 ஜனாதிபதி செயலணி நாளை கூடவிருக்கிறது. அக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும்.

செயலணியின் கடந்த கூட்டத்தின் போது, நாட்டைத் திறப்பதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் அவர் நினைவூட்டினார்.


No comments