எத்தனை எத்தனை கடிதங்களப்பா?


எதிர்வரும் 13ம் திகதி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வாய்மூல அறிக்கையிடலை மிச்சல் பச்சலேற் அம்மையார் வெளியிட உள்ள நிலையில் தமிழ் தரப்புக்கள் தனித்தனியாக அவருக்கு கடிதம் எழுதியதாக தெரியவருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் காணாமல் போனோர் அலுவலகம்,நில ஆக்கிரமிப்பு மற்றும் கொரோனா கால அடக்குமுறைகள் உள்ளிட்ட தலைப்புக்களில் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் தரப்பும் தாமும் கடிதங்களை அனுப்பியுள்ளதாக தெரிவித்து ஊடகங்களிற்கு பிரதிகளை அனுப்பியுள்ளனர்.

இதனிடையே முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன்,கே.சிவாஜிலிங்கம் தரப்பும் தனித்து கடிதமொன்றை எழுதவுள்ளனராம்.

எனினும் இரா.சம்பந்தன் ஒப்பமிட்டதாக சொல்லப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடிதம் பற்றிய தகவல்கள் கிட்டியிருக்கவில்;லை


No comments