ஆட்கொல்லி சுறாவா?: யானையா? கேள்வி!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் யானைகளா அல்லது ஆட்கொல்லி சுறாக்களா உள்ளதென்பதில் சர்ச்சை மூண்டுள்ளது.

கோத்தபாய பெயரில் யானைகளை வைத்திருப்பதற்கான அனுமதிப்பதிரம் உள்ளதா? என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (22) அமர்வில் கலந்துக்கொண்டு வாய்மூல விடைக்கான வினாவை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.  

மயந்த திஸாநாயக்கவின் கேள்விக்குப் பதிலளித்த வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, “இப்போது இல்லை. தேடிப் பார்த்து சொல்கிறேன்.” என பதிலளித்தார்.

சி.பியின் பதிலால் சபையிலிருந்து எதிர்க்கட்சி எம்.பிகள் வாய்விட்டு சிரித்தனர்.

முன்னதாக கோத்தபாய தனது பண்ணையில் வளர்த்ததாக சொல்லப்படும் ஆட்கொல்லி சுறாக்கள் பற்றி கொழும்பு ஊடக பரபரப்பில் பேசப்படுவது வழமையாகும்.

No comments