88ஆயிரம் பேர் ஊசிக்கு விரும்பவில்லை!


வட மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88ஆயிரம் பேர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளில் முதலாவது தடுப்பூசி இதுவரை 559ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது வட மாகாணத்தில் இருக்கின்ற 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 86 சதவீதமாகும். இதே போன்று இரண்டாவது தடுப்பூசி 449,ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது 70 சதவீதமாகும்.

இதுவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88,ஆயிரம் பேர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை. இவர்களில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இலங்கை முழுவதிலும் தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர். 


No comments