6 ஆம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருறுளி ஓட்டப் போராட்டம்!!

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய ஈருருளிப் 

ஓட்டப் போராட்டம் இன்று காலை 07/09/2021 தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி வாவ்ர் நாமூர் மற்றும் வன்சு மாநகர சபையில் தமிழர்களுடைய கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.

பல்லின வாழ் மக்களினால் தமிழர்களுடைய விடுதலைப்பயணத்திற்கான தகவல்களையும் கேட்டறிந்து இனிப்புப் பண்டங்களும் தந்து வழியனுப்பி வைத்தார்கள்.

அவர்களின் உபசரிப்போடு 420Km தொலைவு பயணித்து அந்திசினெசு மாநகரசபை முதல்வராகவும் ஐரோப்பிய பாராளு மன்ற உறுப்பினருமாக அங்கம் வகிப்பவருடன் தமிழின அழிப்பிற்கான அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் என்பதனை வலியுறுத்தப்பட்டது.

மேலும்  தமிழர்களுடைய நீதிக்கு தாமும் குரல்கொடுப்பதாகவும் தமிழர்கள் அனைவரையும் தம் அறவழிப்போராட்டத்தின் ஊடாக பல அரசியல் மையங்களின் கதவுகளை தட்டுமாறும் கூறியிருந்தார்.

No comments