காணொலியில் முன்னணி நினைவேந்தல்!


தியாகி  திலீபனின் 34ம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று காலை 10.30 தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் செயலிமூலம் இணைய வழியில் நினைவுகூரப்பட்டது  

நினைவு நிகழ்வுகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணித்தலைவர் தம்பி சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது  தியாகி திலீபன் எம்மைவிட்டுப்பிரிந்த காலை 10.48 மணிக்கு நிகழ்வில் பங்குககொண்டவார்களினால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுரைகள் இடம்பெற்றது.


நினைவுரைகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான  சுகாஸ் வவுனியாமாவட்ட செயலாளர் தம்பி தவபாலன்,துனைப்பொதுச்செயலாளர்  அண்ணன் சிறிஞானேஸ்வரன் (கண்ணன்),மகளீர் அணிதலைவி அக்கா வாசுகி சுதாகரன்,கொள்கைபரப்புசெயலரும் சட்டத்தரணியுமான அண்ணன் காண்டீபன் ,கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவரும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்மாவட்ட இணைப்பாளரும் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் வடமாகாண  தலைவருமான அண்ணன் இன்பம்,மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் தம்பி அருள்ஜெயந்தன் மற்றும் பாரளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொதுச்செயலருமான. கஜேந்திரன் (கஜன்)  ஆகியோர் நிகழ்த்தினர்

No comments