நயினாதீவு திருவிழா 2022?நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம், இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நயினாதீவு நாகபூசனி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம்,  ஜூன்  10ஆம் திகதியன்று இடம்பெறவிருந்த நிலையில், கொரோனா அச்சம் காரணமாக, செப்டெம்பர் 06ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போதும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துச் செல்வதால், முன்னர் ஒத்திவைக்கப்பட்டதைப் போன்று இம்மாதம் 06ஆம் திகதியன்று மகோற்சவத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, நயினாதீவு கோவில் அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.

எனவே, இந்த வருட மகோற்சவம், கொரோனா வைரஸ் அதிகரித்துச் செல்வதால், இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 286 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


No comments