சிங்கள சிறுவனை கொன்ற படையினர்?

இலங்கையின் வீரகெட்டிய பகுதியில்; 14 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு குடும்பத் தகராறின் போது சுடப்பட்ட சிறுவன் பலத்த காயங்களுடன் வீரகெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று படைத்தரப்பினை சேர்ந்த சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

எனினும், சிறுவனை சுட்டுக்கொன்ற மற்றொரு படைத்தரப்பினை சேர்ந்த நபர் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்று விட்டதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.


No comments