வவுனியாவில் கிணற்றிலிருந்து இளம் பெண் சடலமாக மீட்பு

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து19 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பெண் நேற்றயதினம் இரவு தனது வீட்டில் உறங்கச்சென்றுள்ளார். எனினும் இன்று காலை முதல் குறித்த பெண்ணை காணாத நிலையில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதன்போது அருகில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த மோகன் திலக்சனா (வயது 19) என்ற பெண்ணே மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments