வீதி வீதியாக மரணங்கள்!

இலங்கையில் வீதி வீதியாக கொரோனா மரணங்கள் அரங்கேறத்தொடங்கியுள்ளது.

இன்றைய தினம் வைத்தியசாலைக்கென வருகை தந்து காத்திருப்பு பகுதியில் உயிரிழந்தவர்களது காணொலிகள் தென்னிலங்கையில் வைரலாகிவருகின்றது.

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளம் வயதுத் தாயும் ஒருவாரக் குழந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த இருவருமே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த இளம் தாயும் ஒரு வார குழந்தையும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.No comments