வாழைச்சேனையில் பூவில்லாத வாழைக்குலை!!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையில் வாழை மரம் ஒன்றில் வாழைப்பூ வராமலே காய் காய்த்துள்ள வினோத சம்பவமொன்று அண்மையில்  இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம் என்பவரின் வீட்டுத் தோட்டத்திலேயே இவ்வாறு  வாழைப்பூ இல்லாமல் வாழை குலை போட்டுள்ளது.

இந்நிலையில்  குறித்த வாழை மரத்தை அப்பிரதேச மக்கள் பலரும் பார்வையிட்டுச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments