குடும்பங்கள் திருப்பப்பட்டன:முன்னணி மெய்நிகரிலாம்!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த. செஞ்சோலை வாளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில்

படுகொலைசெய்யப்பட்ட கிளிநொச்சி.முல்லைத்தீவுமாவட்டங்களின் மாணவர்கள் 52 பேரினதும் 10 பணியாளர்களதும் 15ம் ஆண்டு நினைவேந்தலை நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இலங்கை வான்படையால் குண்டுவீசப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிளிநொச்சி செஞ்சோலை காப்பகத்தின் 54 சிறுவர்களை 15 வருடநிறைவை நினைவுகூர நேற்று சனிக்கிழமை (14) அன்று படுகொலை நிகழ்ந்த இடத்துக்கு சென்ற உறவினர்கள் இராணுவத்தாலும் பொலிஸாரினாலும் திருப்பியனுப்பப்பட்டனர். 

இதனிடையே நினைவேந்தலை எம்.ஏ.சுமந்திரன் பாணி சூம் காணொளி வழி முன்னெடுத்துள்ளது முன்னணி.

இவ்வவருடமும் இன்று காலை 9.30 மணிக்கு  யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் செய்யதிட்டமிட்டிருந்தோம். சடுதியாக யாழ்ப்பாணத்தில் கொரோணாநோய்த்தாக்கம் அதிகரித்ததால்  மக்களின் நலன் கருதி கைவிட்டு அந்த நிகழ்வை மெய்நிகர்வழி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணித்தலைவர்  இன்னாசிமுத்து சத்தியசீலன் தலைமையில் முன்னெடுத்ததாக கட்சி அறிவித்துள்ளது.

நினைவுரைகளை தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்மாவட்ட இணைப்பாளரும் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவருமான இன்பம், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவுமாவட்ட செயலாளர் கிந்துஜன், தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் கொள்கைப்பரப்பு செயலர்  காண்டீபன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகா,தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளர் ஆசிரியர் நவநீதன். தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரன் ஆகியோர் நிகழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments