ஒரு நாடு: இருசட்டம்?

 

இலங்கை ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் வரலாற்று சிறப்புமிக்க கண்டி, எசல பெரஹரா சனிக்கிழமை காப்பு கட்டும் நிகழ்வுடன் ஆரம்பமாகியது. .

கண்டி எசல விழாவின் முதல் ‘கும்பல் பெரஹரா’  13 ஆம் திகதி  வீதிகளில் அணிவகுத்து, ஆகஸ்ட் 17 வரை ஐந்து நாட்கள் நடைபெறும்.

ஆகஸ்ட் 18 முதல் ‘ரந்தோலி பெரஹரா’ கண்டி வீதிகளில் அணிவகுத்துச் செல்லும். ஆகஸ்ட் 22 அன்று பிரம்மாண்டமான ரந்தோலி பெரஹரா நடைபெறும்.

தண்ணீர் வெட்டும் விழா மற்றும் பகல் ஊர்வலம் ஆகஸ்ட் 23 அன்று நடைபெறும், அதன்பிறகு இந்த ஆண்டின் கண்டி எசல பெரஹரா வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று அறிவிக்கும் நிருபம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும். .

கொவிட்-19  இருந்தபோதிலும், புராதன பழக்கவழக்கங்களை மதித்து, சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கண்டி எசல பெரஹராவை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.



பெரஹரா நிகழ்வுகளில் பங்கெடுக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 


No comments