புதிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்:சுமா பின்கதவு சந்திப்பு!

சர்வதேசத்தை கையாள மீண்டும் காய் நகர்த்த தொடங்கியுள்ளது கோத்தா அரசு.

அண்மையில் அமெரிக்க தூதரகத்தில் சுமந்திரன்-பீரிஸ் சந்திப்பு நடந்த போது பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் அமைச்சரவை மறுசீரமைப்பு எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது எனவும், நான்கு அமைச்சுக்களில் மட்டும் மாற்றம் இடம்பெறவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

இதன்படி அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தினேஸ் குணவர்தன, டலஸ் அழப்பெரும மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரின் அமைச்சுக்களில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராகவும், தற்போதைய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், மின்சக்தி அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும், ஊடக அமைச்சராக டலஸ் அழப்பெருமவும் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, சுகாதார அமைச்சு பதவியில் மாற்றம் இடம்பெறாது எனவும், பவித்ராவே அப்பதவியில் நீடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் புதிய பதவியை ஏற்கவுள்ள  பீரிஸை சுமந்திரன் சந்தித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.


No comments