ஆமியை கூப்பிட்டு புகையடிக்கிறாரா தியாகி?

யாழில் சுகாதார அலுவலர்களுக்கு விசேட ஊக்குவிப்பு பரிசில்களை  வழங்கவும் ஆமியை கூப்பிட்டுள்ளார் வர்த்தகரான தியாகி வாமதேவன்.

யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்தில் தியாகி அறக்கொடை நிதிய ஸ்தாபகத்  தலைவர்  வாமதேவன் தியாககேந்திரனின் நிதிப் பங்களிப்பில்  கொரோனா தாக்கத்தின் மத்தியிலும்  அர்ப்பணிப்புடன் விசேடமாக பணியாற்றும் 100 பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கும்    ,  250 பொது சுகாதார மாதுக்களுக்குமாக கௌரவித்து விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளது.

சுதந்திரக்கட்சி முக்கிய பிரபலமான கந்தசாமி கருணாகரன்  ஏற்பாட்டில்  இதற்கான விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இவ் நிகழ்வுக்கு யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல்   ஜெகத்  கொடித்துவக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு தியாகி வாமதேவன்  தியாகேந்திரனின் விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை   வழங்கி கௌரவிப்பாராம்.

இதேவேளை  தியாகி வாமதேவன் தியாகேந்திரன்  அண்மையில் கொவிட்  நிதியத்திற்காக 200 லட்சம் ரூபாவை இருகட்டங்களாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ அவா்களின்  கொவிட் நிதியத்திற்கு   கடந்த வாரம்   ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி கருணாகரனின் ஒழுங்கமைப்போடு பலாலியில் வைத்து மாவட்ட தளபதி ஜெகத் கொடித்துவக்கிடம் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments