மட்டக்களப்பில் சங்கலி திருட்டில் முன்னாள் சிப்பாய்!!


மட்டக்களப்பு கல்குடா விநாயகபுரம் பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் மற்றுமொரு இளைஞரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி   பிரதம பொலிஸ் பரிசோதகர் சந்தன விதானகே தெரிவித்துள்ளார்.

இவர்கள் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டயைடுத்து அவர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவர் தனியாக கடைக்குச்சென்று திரும்பும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த 22 வயதுடைய இளைஞர் குறித்த சிறுமி அணிந்திருந்த சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை அபகரித்துச்சென்ற சம்பவம் அப்பகுதி வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டடிருந்த  சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்தது.  

அதனை அடிப்படையாகக்கொண்டு குறித்த சந்தேகநபரை கைதுசெய்த பொலிஸார், குறித்த தங்கச் சங்கிலியை விற்பனை செய்வதற்கு வாழைச்சேனை மீன்பிடி துறைமுகப்பகுதியில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

இதையடுத்து குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ வீரர் மேலும் பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவரென தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.No comments