சீலனிடம் 6வது தடவையாக வாக்குமூலம்!


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரியக்க கிழக்கு மாகாண செயற்பாட்டாளர் சீலன் என்றழைக்கப்படும் சபாரத்தினம் சிவயோகனாதன் மீண்டும் விசாரணைகளிற்கு அழைக்கப்பட்ட நிலையில் இன்று ஆறாவது தடவையாக வாக்குமூலமளித்துள்ளார்.

நேற்று காலை அவரது வீட்டிற்கு வருகை தந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர்;,இன்று புதன்கிழமை மதியம் கல்லடி காட்டுக் கந்தோர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக வருமாறு எழுத்து மூலமான கடிதத்தினை வழங்கி சென்றிருந்தனர்.

இன்றைய தினம் சமூகமளித்த அவரிடம் ஆறாவது தடவையாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சமூக ஊடகப்பதிவுகள் தொடர்பில் கிழக்கில் தமிழ் இளைஞர்கள் வேட்டையாடப்பட்டுவருகின்றனர்.

இத்தகைய பின்னணியில் சபாரத்தினம் சிவயோகனாதனிடம் வாக்குமூலம் மீண்டும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments