சந்நிதி கோவில் வியாபாரிகளிற்கும் கொரோனா!
வரலாற்று புகழ் மிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேவேளை மேலும் சிலருக்கு பரிசோதனை முடிவுகள் வெளியாகாத நிலையிலும் உள்ளதாக சுகாதாரப்பிரிவு அறிவித்துள்ளது.
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய சூழலில் இருந்த அன்னதான மடம் சீலிடப்பட்டுள்ளது. சுகாதார பரிசோதகர்களால் ஆலயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் ஆலய பூசகர்கள், தொண்டர்கள், உபயகாரர்கள் மற்றும் வர்த்தகர்கள் என பலருக்கும் நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இரு கச்சான் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சிலரின் முடிவுகள் வெளியாகாமலும் உள்ளது.
Post a Comment