பிறந்து ஒரு நாளேயான குழந்தைக்கு கொரோனாத்தொற்று!

 

யாழ்ப்பாணத்தில் பிறந்து ஒரு நாளேயான குழந்தை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று பிறந்த குழந்தைக்கு இன்றுமேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தையும் தாயும் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தைக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அதன் போதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை கொரோனா பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments