விசுவாசப்பிரச்சினை:சுமா,சுரேன் புகைச்சல்!

காணாமல் போனோர் விவகாரத்தில் தமிழ் கட்சிகள் இலாபம. பெற முயல்வதாக கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் இராகவன் ஏன் அதே தமிழ்க் கட்சியிடம் வந்து நியமனம் பெற கெஞ்சினார் எனத்தெரியவில்லையென்கிறார் எம்.ஏ.சுமந்திரன். 

காணாமல் போனோர் அலுவலகத்தின் புதிய ஆணையாளர் ஓய்வு பெற்ற நீதியரசர்  உபாலி அபயரத்ன வந்த பின்பு இடம்பெற்ற மெய்நிகர் வழி   கலந்துரையாடல் நேற்று இரவு 7 மணிமுதல் 8 மணிவரை  இடம்பெற்றது. இதில் நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான  சுரேன் ராகவன், ஆகியோரின் உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில், காணாமல. ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கான சட்ட மூலத்தில் இந்த அலுவலகம் என்ன என்ன விடயம் ஆற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் முக்கிய விடயம்  காணாமல்போனவர்கள் எப்படி காணாமல் போனார்கள் என்பதனை கண்டு பிடிப்பதுதான் முக்கியமான பணி. 

அந்த சட்டத்தின் கீழ் ஆணையாளர்களை நியமித்து விட்டு அவர்கள் செய்ய வேண்டிய முக்கிய பணியை செய்யத் தேவை இல்லை என்பது அந்தச் சட்டத்திற்கே முரணானது. நீதி அமைச்சரே இப்படி கூறியிருக்க முடியாது சட்டத்திற்கு முரணாகவும் செயல்பட முடியாது .

எமது மக்களின் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான நீதியை தேடுவது , அவர்களிற்கு என்ன நடந்தது என உண்மையை கண்டறிவது. அவர்களிற்கு என்ன நடந்தது என்ற உண்மை கண்டறியப்படாமல் நல்லிணக்கம் ஏற்படுத்த முடியாது. அதாவது உண்மையை மறைத்து செயல்பட இந்த அலுவலகம் உருவாக்கப்படவில்லை. இதேநேரம் இழப்பீடு கொடுப்பது இவர்கள் வேலை அல்ல என்றார்.

 


No comments