பயந்தாக்கொள்ளி அரசு இரவிரவாக களவு செய்கிறது!

பயந்தாக்கொள்ளி இலங்கை அரசு திருட்டுத்தனமாக காணாமல் போனோருக்கான அலுவலகத்தை மாவட்டங்கள் தோறும் அமைத்துவருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் -வடகிழக்கு மாகாணம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

இன்று திங்கட்கிழமை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டின் காணொலி வழி ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

கொரோனாவை முன்னிறுத்தி  காணாமல் ஆக்கபட்ட குடும்பங்களது போராட்டங்களை இலங்கை அரசு முடக்கியுள்ள நிலையில் இன்று வீட்டிலிருந்தவாறே கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

உள்ளக பொறிமுறையினை முற்றாக நிராகரித்திருந்த அவர்கள் சர்வதேச தலையீட்டின் மூலமே தீர்வை தாங்கள் பெற்றுக்கொள்ளமுடியுமெனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

48வது ஜநா அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் சர்வதேசத்தை ஏமாற்ற கிளிநொச்சியில் இரவிராக காணாமல் போனோர் அலுவலகத்தை திறந்துவைத்ததை சுட்டிக்காட்டிய அவர்கள் தமது போராட்டம் தீர்வு கிட்டப்படும் வரை கைவிடப்படாதென தெரிவித்தனர்.

தமது போராட்டத்தை 1653வது நாளாக முன்னெடுப்பதாக தெரிவித்த அவர்கள் ஜநாவிற்கான தமது கோரிக்கை உள்ளடங்கிய மகஜரினை இன்று அனுப்பி வைத்திருந்தனர்.



No comments