சீனியை தேடியும் இலங்கையில் சுற்றிவளைப்புக்கள்!இலங்கையில் காணாமல் போயுள்ள சீனி முடைகளை தேடி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் இலங்கை அரசு தேடுதலை ஆரம்பித்துள்ளதாம்.இலங்கை நுகர்வோர் அதிகார சபையிடம் பதிவு செய்யாமல் உள்ள சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சீனியை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.


No comments