நீதிமன்ற பதிவாளர் மரணம்!


கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் உயிரிழந்துள்ளார் .நேற்று (4) மாலை இவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, குறித்த பதிவாளருடன் நெருங்கிப் பழகிய அனைவருக்கும் என்டிஜன் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்,  எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  4,727 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 2,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 318,762ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,754 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 284,524 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன்  28,770 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

No comments