முடிவொன்றை எடுக்க வேண்டியிருக்கும்: ஹேமந்த




இலங்கையில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தவறினால், டெல்டா திரிபை வைரஸ் பரவலை கட்டுப்படுத்ந கடினமாகிவிடும் என, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் டெல்டா திரிபு இன்று இலங்கையில் பரவத் தொடங்கியுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறையில் டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருவதாக அவர்  சுட்டிக்காட்டினார்.

 இந்த சூழ்நிலையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால் ஒரு நாடாக டெல்டா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக மாறிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இது குறித்து கருத்து தெரிவித்த பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத், தற்போதைய நிலைமையை மீளாய்வு செய்து,அதை சமநிலைப்படுத்த முடியாவிட்டால் முடிவொன்றை எடுக்க வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.

No comments