இலங்கை:வீடுகளுள் மரணிக்கும் மக்கள்!

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் வீடுகளினுள் மக்கள் உயிரிழந்து போவது சாதாரணமாகியுள்ளது.

தென்பகுதியில் மர்மமான முறையில் வீடுகளினுள் மரணித்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

வீடுகளுக்குள்ளே மரணித்த இவ்விருவரின் சடலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போதே, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

நாவுல கணுமுலயாய பகுதியில் 65 வயதானவரும், கெஹல்எல்யாய பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதானவருமே இவ்வாறு மரணித்துள்ளனர்.  இவ்விருவருடன் சேர்த்து, நாவுல பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 06ஆக அதிகரித்துள்ளது.


No comments