இலங்கை:கொரோனா பற்றி பேசினால் உள்ளே!

கொரோனா மரணங்கள் தொடர்பில் புள்ளிவிபரங்கள் மறைக்கப்படுவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில்  போலியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதாக பொதுமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் தொடர்பான படங்களை இலங்கையில் நிகழ்ந்த மரணங்கள் என போலியான தகவல்களை அவர் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

களுபோவில வைத்தியசாலையில் கொரோனா மரணங்களினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் அவர் தவறான தகவல்களை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுகொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கை கடலில் உயிரிழந்த உயிர்வாழினங்கள் கரை ஒதுங்கிய போதும் அமைச்சர் டக்ளஸ் இணையங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு படங்கள் என வியாக்கியானம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.


No comments