மட்டக்களப்பில் வாவி ஓரத்தில் மைக்ரோ கைத்துப்பாக்கி மீட்பு


மட்டக்களப்பு காத்தான்குடி காங்கேயனோடை வாவியோரத்திலிருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்நிலையப் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

நேற்று மாலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் குறித்த கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

கைத்துப்பாக்கியுடன் 2 ரவைக்கூடுகளும் மற்றும் 8 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மட்டக்களப்பு நீதிபதி முன்னிலையில் முன்வைக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments