ஐரோப்பாவுக்குள் அகதிகள் வரவைத் தடுக்க கிறீசில் 40 கி.மீ தடுப்புச் சுவர்


ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து துருக்கி வழியாக ஐரோப்பாவுக்கு அகதிகள் வருவதைத் தடுப்பதற்காக கிறீஸ் நாடு துருக்கி எல்லையை மறித்து 40 கிலோமீற்றர் தூரம் தடுப்புச் சுவரை எழுப்பியுள்ளது. 

அத்துடன் எல்லைப் பகுதியில் வருவோரைக் கண்காணிப்பதற்கு கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளதாக கிறீஸ் தெரிவித்துள்ளது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதை அடுத்து, ஐரோப்பாவில் 2015 இல் ஏற்பட்ட இடம்பெயர்வு நெருக்கடியை எதிர்கொள்ளும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் மக்கள் துருக்கி கிறீஸ் எல்லையூடாக ஐரோப்பாவுக்குள் நுழைந்தனர்.


கிறீஸ் அரசாங்கம் கடந்த வாரம் அகதிகளை ஐரோப்பாவுக்குள் செல்ல அனுமதிக்காது என்றும் மக்களைத் திருப்பிவிடும் என்றும் கூறியது. 


அதேபோல் எங்கள் நாடு சட்டவிரோத ஆப்கானிஸ்தான் குடியேறியவர்களுக்கு ஐரோப்பாவின் நுழைவாயிலாக இருக்காது என்று இடம்பெயர்வு அமைச்சர் நோடிஸ் மிதாராச்சி ஒரு அறிக்கையில் கூறினார்.


No comments