தலிபான்களை நாங்கள் அங்கீகரிக்கவில்லை - ஐரோப்பிய ஒன்றியம்


தலிபான்களை அங்கீகரிக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் உர்சுலா வான் டெர்லேயன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் ஒரு வாரம் கடந்த நிலையில் இன்று சனிக்கிழமை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்:-

ஐரோப்பிய ஒன்றியம் தலிபான்களை அங்கீகரிக்கவில்லை. இதுவரை தலிபான்களுடன் அரசியல் பேச்சுக்களை நடத்தவில்லை.

ஆப்கானிஸ்தானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கிய மனிதாபிமான உதவிகளில் 57 மில்லியன் யூரோக்களை அதிகரிக்க உள்ளது.  மனித உரிமைகள், சிறுபான்மையினருக்கு நல்ல சிகிச்சை மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கான மரியாதை ஆகியவற்றுடன் ஐரோப்பிய ஒன்றிய மேம்பாட்டு உதவி இணைக்கப்பட்டுள்ளது.

தாலிபான்களின் வார்த்தைகளை நாம் நன்றாகக் செவிமடுக்கலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் செயல்களால் அவற்றை அளவிடுவோம்.

அகதிகளை மீள்குடியேற்ற உதவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு நிதியுதவி வழங்க ஆணையம் தயாராக இருக்கிறது. அடுத்த வாரம் நடைபெறும் ஜி 7 கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரச்சினையை எழுப்ப திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.

No comments