முல்லைத்தீவில் போலி நாணயத்தாள்கள் பெண் ஒருவர் கைது!!


முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 500 ரூபா போலி நாணயத்தாளினை

தன்வசம் வைத்திருந்த 41 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 500 ரூபா நாணயத்தாள்கள் 17 கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

500, 1000 மற்றும் 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டு பயன்படுத்தப்படும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. எனவே பொது மக்கள் போலி நாணயத்தாள்கள் தொடர்பில் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments