மந்திகையில் இருவர் உயிரிழப்பு!


பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

36 வயதுடைய பெண் மற்றும் 46 வயதுடைய ஆண் ஒருவருக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கம்பர்மலை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கான பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments