கிளியில் 3மரணம்:160 தொற்றாளர்கள்கிளிநொச்சியில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் கிளிநொச்சியில் 3 பேர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர்

அதேவேளை இன்றைய தினம் ( 28) கிளிநொச்சியில் 160 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே இலங்கையில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

டெல்டா திரிபு தொடர்பான புதிய அறிக்கையின் படி ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் டெல்டா திரிபானது கொழும்பில் வேகமாக பரவலடைந்துள்ளதாக ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். 

அதற்கமைய கொழும்பில் 100 வீதம் டெல்டா பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இனங்காணப்பட்ட டெல்டாவின் 3 மரபணு திரிபுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் ஒவ்வொரு மரபணு திரிபும் படிப்படியாக பிரதான திரிபாக மாறிக் கொண்டிருப்பது இனங்காணப்பட்டது.

மிகக்குறுகிய காலத்திற்குள் அசல் டெல்டா திரிபானது புதிய திரிபாக மாற்றமடைந்து விரைவாக பரவி வருகின்றமையும் இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.


No comments