வவுனியா மாவட்ட செயலராக மீண்டும் சிங்களவர்!வவுனியா மாவட்ட செயலாளராக சிங்களவரான பீ.ஏ.சரத்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று மதியம் வெள்ளிக்கிழமை மதியம் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

வவுனியா மாவட்ட செயலராக கடமையாற்றிய சமன்பந்துலசேன வடமாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்று சென்றிருந்தார்.

இந்நிலையில், பௌத்தசாசன அமைச்சில் உதவி ஆணையாளராக பதவி வகித்த பீ.ஏ.சரத்சந்திர வவுனியா மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலராக  நியமிக்கப்பட்ட நிலையில், தனது குடும்பத்தவர்களுடன் வவுனியாவிற்கு வருகை தந்து கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். 


No comments