இராணுவம் கட்டினாலும் இடிப்போம்!இரணைமடு சந்தி பகுதியில் வீதியில் இலங்கை இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின் இடித்தகற்றப்படுமென கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

இரணைமடு சந்தியிலே இராணுவத்தினரால் அனுமதி எதுவுமின்றி வளைவு கட்டப்படுகின்றமை தொடர்பில் பொது மக்களால் எமக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. நாங்கள் சட்ட ரீதியாக நடவடிக்கைகளை எடுத்து, கட்டுமான பணிகளை நிறுத்துமாறு அறிவித்திருக்கிறோம்.

தற்போதைய பெருந்தொற்று காலத்தினை பயன்படுத்தி இராணுவத்தினர் நிர்மாணப்பணிகளை முன்னெடுத்து வருவதாக பொது மக்களால் மீண்டும் எமக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நிர்மாண பணிகளை உடன் நிறுத்தாவிடின் கட்டடத்தை இடித்தகற்றவேண்டுமெனவும் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.


No comments