வடக்கு ஒரே நாளில் ஆயிரத்தை தாண்டியது?வடமாகாணத்தில் நேற்றைய தினம் ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை அச்சத்தை தந்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்;று முன்னெடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 414 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே வவுனியா மாவட்டத்தில் நேற்;று ஒரே நாளில் 244 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

செட்டிகுளம் பகுதியில் இருந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளது. 

இதேவேளை முல்லைதீவு,கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களையும் கணக்கினில் உள்ளடக்குகையில் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை ஒரே நாளில் வடக்கில் ஆயிரத்தை தாண்டியுள்ளது.


No comments