மீண்டும் தப்பியோட்டம்!வடகிழக்கிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முயன்ற 25 பேரை இலங்கை குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் கடல்சார் குற்றப் பிரிவு கைது செய்துள்ளது.

மூன்று நாள் சிறப்பு நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மானிப்பாய், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன், பருத்தித்துறை, நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட நபர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


No comments