நூறு பேருடன் நல்லூர் திருவிழா!
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ள நிலையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலயங்களுக்கான  சுகாதார வழிகாட்டலின் படி 100 பேருடன் ஆலய உட்பிரகாரத்தில் மாத்திரம் திருவிழா நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

No comments