மருத்துவர்களை நம்பவில்லை:ஆமியே வேண்டுமாம்!

இலங்கையில் சுகாதார துறையை கோத்தபாய நம்ப மறுத்துவருகின்ற நிலையில் கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான முழு அதிகாரமும் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை இல்லாமல் வெளி நபர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கப்பட்ட  சம்பவங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

மருத்துவர் ஒருவரது 12 வயது மகளிற்கு தடுப்பூசி வழங்கப்பட்டமை மற்றும் அவர்களது வீட்டு பணியாட்கள்,சாரதிகளிற்கும் அவ்வாறு வழங்கப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இனிமேல், ஃபைசர் தடுப்பூசி இராணுவத்தின் அனுசரணையுடன் மக்களுக்கு வழங்கப்படும் என்றும், முறையான நடைமுறைக்கு வெளியே தடுப்பூசி பெற தகுதியற்ற எந்த நபருக்கும் வழங்கப்படமாட்டாது என்றும் இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

சிலாபத்தில் உள்ள கொக்காவில தடுப்பூசி மையத்தில் சுகாதார அதிகாரிகளின் தலைமையில் ஃபைசர் தடுப்பூசி வெளியாட்களுக்கு வழங்கப்பட்டமை அண்மையில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே யாழ்ப்பாணத்திலும் மருத்துவர்களது பின்னணியில் மதுபான சாலை ஊழியர்களிற்கு தடுப்பூசி வழங்கப்பட்டமை அம்பலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments