மக்கள் தாராளம்:3வார தடைக்கு அழைப்பு!



நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப் பட்டிருந்தாலும் மக்கள் தாராளமாக வீதிகளில் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் பயணக் கட்டுப்பாட்டை மிக இறுக்கமாக்கி நாட்டை மேலும் 3 வாரங்கள் முடக்குங்கள் என விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

3 வாரங்களில் நாட்டின் கொவிட் நிலைமையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும், அதனைத் தொடர்ந்து நாட்டை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும்படி அச்சங்கம் அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. தற்போது பயணத்தடைகள் அமுலில் இருந்தாலும், அதிகளவான மக்கள் வீதிகளில் பயணிப்பதை அவதானிக்க முடிவதாகவும், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளுடன் இந்த முடக்கத்தை இன்னும் 3 வாரங்களுக்கு நீடிக்குமாறு விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

வைரஸ் பரவைலக் கட்டுப்படுத்தல், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்தல், கொரோனா மரணங்களின் எண்ணிக்கையை குறைத்ததன் பின்னரே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 26ஆம் திகதி உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் பொருளாதாரத்தை வழமையான நிலைமைக்கு கொண்டுவரும் அதேவேளை, மனித உயிரிர்களை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாத விடயமெனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாக விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் கூறியுள்ளது.


No comments