61 விழுக்காடு ஊசி போட்டாயிற்று!

 


இலங்கையில் முழுமையாக தடுப்பூசி வழங்கி திறந்து விட அரசு கனவு காண்கின்ற நிலையில் மொத்த சனத் தொகையில் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (29) வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்ட இரண்டு கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 704,2418  ஆகும். இது 30 வயதுக்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் 61விழுக்காடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு, ஆடைத் தொழில் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments