கொரோனா: வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் பலி!

கொரோனா தொற்றிற்குள்ளாகியிருந்த வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நகரசபை தவிசாளர் கருணாகரராசா மரணித்துள்ளார்.

செல்வசந்நிதி ஆலயத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இதனிடையே யாழில் கற்பிணி தாய் உட்பட நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் இறந்தவர்களில்  5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்த நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மானிப்பாய், நவாலி மேற்கைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146ஆக உயர்வடைந்துள்ளது.



No comments