விடுதலைப்புலிகளுடன் எதுவித தொடர்புகளையும் பேணவில்லை!! தலிபான்

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இதுவரை தொடர்புகளை கொண்டிருக்கவில்லையென தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லிமிரருக்கு வழங்கிய செவ்வியிலேயே தலிபான்களின் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்நிலையில் ‘தலிபான்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்   எவ்விதத் தொடர்பும் இல்லை.

தலிபான் ஒரு சுயாதீன விடுதலைப் படை, கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காகவும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராடி வருகின்றது என்றும் கூறினார்.

மேலும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் அமைதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்  அவர் தெரிவித்தார். No comments