கூலிப்படையென்பதை நிரூபித்தது இலங்கை இராணுவம்!



யாழ்ப்பாணம் பொன்னாலை மேற்கு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நள்ளிரவு புகுந்த இராணுவத்தினர் , வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

இது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் பிருந்தாபன் பொன்ராசா தெரிவிக்கையில் , நேற்றைய தினம் நள்ளிரவு 11.50 மணியளவில் இராணுவ இலக்க தகடுகள்  பொருத்திய மோட்டார் சைக்கிளில் உள்ளிட்ட வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட இராணுவ சீருடை தரித்தவர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர். 

சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட நான் அவ்விடத்திற்கு சென்ற போது . இராணுவ சீருடை தரித்தவர்கள் என்னுடனும் முரண்பட்டுக்கொண்டனர். 



உடனடியாக நான் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்தேன். அதனை அடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். என தெரிவித்தார். 

அதேவேளை,  பொன்னாலை மாட்டு வண்டி திடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கொரோனா பெருந்தொற்று அபாயம் நிலவும் வேளையில் , அராலியில் இருந்து வந்தவர்களால் மாட்டு வண்டி சவாரி நடத்தப்பட்டது. 

அதன் போது இரு தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியது. அதில் 10கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். அதன் பின்னணியிலையே ஒரு தரப்பினரின் ஏவுதலில் இராணுவத்தினர் மற்றைய தரப்பினர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதாக அறிய முடிகிறது. 

No comments