ஹைட்டி நிலநடுக்கம்!! 1,297 பேர் பலி!! 2,800 பேர் படுகாயம்!!


ஹைட்டியில் நேற்று சனிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 1,297 பேர் இறந்துள்ளதாகலும் 5,700 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் ஹைட்டியில் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கிக்கொண்டு உயிருடன் இருப்பவர்களை தேடும் முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தில் வீடுகள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிகள் கட்டிடங்களுக்கு தரைமட்டமாகியுள்ளன. சில மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன.

சனிக்கிழமை நிலநடுக்கத்தின் மையப்பகுதி செயிண்ட்-லூயிஸ் டு சுட் நகரத்திலிருந்து சுமார் 12 கிமீ (7.5 மைல்) தொலைவில் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.

ஆனால் 125 கிமீ தொலைவில் உள்ள போர்ட்-ஓ-பிரின்ஸின் அடர்த்தியான தலைநகரிலும் அண்டை நாடுகளிலும் இந்த நடுக்கத்தை உணர முடிந்தது.

No comments