இலங்கை :சுடலையிலும் இடமில்லை!

 


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின்  உடல்கள் அடங்களாக, 1,437 பேர் மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே 1,437 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 ”25 க்கு மேற்பட்ட உடல்கள் நாளாந்தம் வந்த வண்ணமிருக்கிறது. ஆகையால், இனிவரும் நாள்களில் உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது” என ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர்   தெரிவித்துள்ளார். 

 நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டுமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை இந்த பொது மயானத்திலே இந்த உடலகங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றன.  

இந்த நிலையில் இந்த உடல்களை அடக்கம் செயவதற்கு 3 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி  அதில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.


இந்த காணி போதாது என அதனுடன் இணைந்த மேலும் இரண்டு ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி 5 ஏக்கர் காணியில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.


இந்துக்களின் 40 உடல்கள், கிறிஸ்தவர்களின் 28 உடல்கள், பௌத்தர்களின் 21 உடல்கள் உட்பட, ​ஓகஸ்ட் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையிலும் 1,437 பேரில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த 5 ஏக்கர் காணியிலே இன்னும் சுமார் 500 உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யமுடியும். இருந்தபோதும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாளாந்தம் 25 அல்லது 30 உடல்கள் நாடளாவிய ரீதியில் இருந்து வருகின்றதன் காரணமாக இன்னும் ஒருசில நாட்களில் இந்த இடம் முடிந்துவிடும்.

“எனவே, மாற்று இடத்துக்கு எங்கு செல்வது என்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவே, உடனடியாக ஓரிடத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

No comments