வெளியே வரவேண்டாம்:கேதீஸ்வரன்!

 


வடக்கு மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக நோய் அறிகுறிகளுடன் பெருமளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருகின்றனர். இது ஒரு ஆபத்தான விடயமென மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா நோய் பரவலானது அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. குறிப்பாக மேல் மாகாணத்தை பொறுத்தவரை இறப்புகள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.

சுகாதார அமைச்சு, சுகாதாரத் திணைக்களம் என்பன ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளன. 

வடக்கு மாகாணத்தில் உள்ள ஒன்பது கொரோனா இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களும் நிரம்பிக் காணப்படுகின்றன. அத்தோடு கொரோனா நோயாளர்களை பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட வைத்தியசாலை விடுதிகளும் நிரம்பிக் காணப்படுகின்றனவெனவும் தெரிவித்துள்ளார்.


No comments