7 போதாது:14 வேண்டும்-அமைச்சரும் வீட்டில்!இலங்கையின்  வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது அலுவலக அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அமைச்சரும் அன்டிஜன் பரிசோதனை செய்துள்ளார்.

இதில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இதனை  குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே உரிய பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், குறைந்தபட்சம் 14 நாள்கள் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டு காலமானது போதுமானதாக இல்லை என சங்கத்தின் தலைவர், உபுல் ரோஹன குறிப்பிட்டார். நாட்டில் தொடர்ச்சியாக அதிகமான கொரோனா நோயாளர்கள் பதிவாவதுடன், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் கூறினார்.


உரியவாறு பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டால், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படலாம் என உபுல் ரோஹன தெரிவித்தார்.


தற்போது பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், வீதிகளில் அதிகளவான வாகனங்கள் பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

No comments